×

ஒரே சேலையில் தூக்குப்போட்டு கணவன், மனைவி தற்கொலை

பண்ருட்டி: பண்ருட்டி அருகே கணவன், மனைவி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டாண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமரவேல் (32). பால்வண்டி டிரைவர். இவரது மனைவி மீனா (20). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இவர்கள் வீட்டு மாடியில் தனியாக வசித்து வந்தனர். கீழ் வீட்டில் குமரவேலின் பெற்றோர் வசித்து வந்தனர். நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்ற குமரவேல் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.

இந்நிலையில் இன்று காலை குமரவேலின் பெற்றோர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் ஒரே சேலையில் கணவன், மனைவி இருவரும் மின்விசிறி கொக்கியில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post ஒரே சேலையில் தூக்குப்போட்டு கணவன், மனைவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Panruti ,Katandikuppam ,Cuddalore district ,
× RELATED ஒரே சேலையில் கணவன், மனைவி தூக்குபோட்டு தற்கொலை