×

திருச்சியில் டிரைவரை தாக்கியவர் கைது

 

திருச்சி, மே 28: திருச்சியில் லாரி டிரைவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி அருகே சோமரசம்பேட்டை சோழிங்கநல்லூர் புதிய பாலம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(53). உய்யகொண்டான் திருமலை மேலத்தெருவை சேர்ந்தவர் ரஜினி(43). இருவரும் லாரி டிரைவர்கள். நாகராஜனிடம் கிராவல் மண் வேண்டுமென ரஜினி கேட்டார். அதன்பேரில் லாரியில் கிராவல் மண் ஏற்றி வந்து கொடுத்ததுடன் அதற்கான பணம் ரூ.6 ஆயிரத்தை நாகராஜன் கேட்டார். அதற்கு பணம் தர ரஜினி மறுத்து அங்கிருந்து சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி வயலூர் மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபம் அருகே இருவரும் சந்தித்து பணப்பிரச்னை தொடர்பாக இருவரும் பேசியபோது, ஏற்பட்ட தகராறில் ரஜினி உருட்டுக்கட்டையால் நாகராஜனை தாக்கினார். இதுகுறித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிந்து ரஜினியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post திருச்சியில் டிரைவரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy Trichy ,Trichy ,Nagarajan ,Choshinganallur New Bridge ,Somarasampet ,Rajini ,Thirumalai Melatheru ,Uyyakonda ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்