×

இருசக்கர வாகனங்கள் மோதல்; விவசாயி பலி

 

தாராபுரம் மே 28: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே 2 டூவீலர்கள் மோதிய‌தில் விவசாயி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டடம் அருகே எரகாம்பட்டி, பனப்பதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (45). விவசாயி. நேற்று முன்தினம் இரவு நாரணாபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் (55) என்பவருடன் பைக்கில் பெரியபட்டி குண்டடம் சாலையில் மானூர்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு டூவீலரில் சென்ற பேட்டைக்காளிபாளையத்தை சேர்ந்த பிரபாகரன் (32) திடீரென ரோட்டை கடக்க முயன்றார்.

எதிர்பாராதவிதமாக 2 டூவீலர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்‌தில் 3 பேரும் டூவீலரில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை பலனின்றி சந்‌திரசேகர் நேற்று இறந்தார். மேலும் ஈஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இருசக்கர வாகனங்கள் மோதல்; விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Kuntadam ,Tirupur district ,Chandrasekhar ,Eragampatti, Banapatti ,Gundam ,Bali ,
× RELATED தாராபுரத்தில் கூடைப்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு டிஎஸ்பி பரிசு