×

எல்.ஆர்.ஜி மகளிர் கல்லூரியில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

திருப்பூர், ஜூன்22: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், நான் முதல்வன் ஆகியவைகள் சார்பில் இன்று திருப்பூர் பல்லடம் ரோட்டிலுள்ள எல்.ஆர்.ஜி மகளிர் கல்லூரியில் மெயின் ஆடிட்டோரியத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதில் இளங்கலை அறிவியல், இளங்கலை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில் அலுவலர்கள் கலந்து கொண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். இதில் படித்து முடித்து வேலை தேடும் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

The post எல்.ஆர்.ஜி மகளிர் கல்லூரியில் இன்று வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : LRG Women's College ,Tirupur ,Tamil Nadu Skill Development Corporation ,Nan ,Muluvan ,Palladam Road, Tirupur ,Dinakaran ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி...