×

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு லாலு எதுவும் செய்யவில்லை: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு

ஆரா: பீகார் மாநிலம், ஆரா தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.சிங்கை ஆதரித்து நேற்று பேசிய அமித் ஷா,‘‘பீகாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், காட்டாட்சி ஏற்பட்டு கடத்தல்,கிரிமினல்களுக்கு இடையேயான சண்டை நடக்கும். மீண்டும் காட்டாட்சி ஏற்படுவதை மக்கள் விரும்பவில்லை. ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்கு எந்த விதமான நன்மையையும் செய்யவில்லை. லாலு ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு நன்மை செய்வார் என்று நினைப்பது தவறு.

லாலு தன்னுடைய 2 மகன்களை அமைச்சர்களாக்கினார். ஒரு மகளை மாநிலங்களவை எம்பி ஆக்கினார். இன்னொரு மகள் தேர்தலில் போட்டியிடுகிறார். மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். யாதவ சமூகத்தினரின் நலனுக்கு அவர் எதையும் செய்யவில்லை.காங்கிரஸ், லாலு மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள். தலித்துகள்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இடம் அளிக்க காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகள் முயற்சிக்கின்றன. மோடி தலைமையிலான பாஜ அரசு இதை அனுமதிக்காது’’ என்றார்.

The post பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு லாலு எதுவும் செய்யவில்லை: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Lalu ,Union Minister ,Amit Shah ,Aura ,Bihar ,R. K. ,Singh ,India ,RJD ,Dinakaran ,
× RELATED அமித் ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்