×

லிங்க்கை தொட்டதால் தொழிலாளி வங்கி கணக்கில் பணம் அபேஸ்

 

ஆலந்தூர், மே 24: ஆதம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (43). இவர் கடந்த 21ம் தேதி தன்னுடைய செல்போனில் பேஸ்புக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ‘500 ரூபாய் மந்திரம்’ நோட்டை தொட்டு வெற்றி பெறுங்கள், 5000 ரூபாய் கேஷ் பேக் பெறுங்கள் என்ற லிங்க் வந்துள்ளது. அதை தொட்டவுடன் உங்களுக்கு 5000 ரூபாய் வந்துவிட்டது.

உங்கள் ஜிபே பேலன்ஸை பார்க்கவும் என்ற தகவலும் வந்துள்ளது. இதனை பார்த்ததும் ஆவலுடன் இருந்த வினோத், தனது ஜிபே அக்கவுண்ட்டில் பேலன்ஸை பார்த்தபோது வங்கி கணக்கில் இருந்த ரூ.4650 அபேஸ் செய்யப்பட்டது தெரிந்தது. அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து வினோத் ஆதம்பாக்கம் போலீசாரிடம் செல்போனில் புகார் கொடுத்தார்.

The post லிங்க்கை தொட்டதால் தொழிலாளி வங்கி கணக்கில் பணம் அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Alandur ,Vinod ,Adambakkam Pilliyar Koil Street ,Facebook ,Dinakaran ,
× RELATED நல்ல பாம்பு கடித்ததில் நாய் உயிரிழப்பு