×

பள்ளி வகுப்பறையில் மாணவி பலாத்காரம்: வீடியோ எடுத்து ரூ5 லட்சம் கேட்டு மிரட்டல்: 5 மாணவர்கள் அதிரடி கைது


திருமலை: மார்க் லிஸ்ட் வாங்க பள்ளிக்குச் சென்ற மாணவியை வகுப்பறையில் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து ரூ5 லட்சம் கேட்டு மிரட்டிய சக மாணவன் உட்பட 5 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் ஏளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி படித்து வருகிறார். இவர் அண்மையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். தேர்ச்சி பெற்ற அவர் கடந்த 15ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காக பள்ளிக்கு சென்றார். ஆனால் பள்ளியில் யாரும் இல்லாததால் வீடு திரும்ப முயன்றார். அப்போது அவருடன் படிக்கும் சக மாணவன் ஒருவன் அங்கு வந்தான். அவர், மாணவியிடம் பேசியபடியே வகுப்பறைக்கு அழைத்துச்சென்றுள்ளார். வகுப்பறையில் அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் இருந்தனர்.

அப்போது அங்குள்ள வகுப்பறைக்குள் மாணவியை திடீரென மாணவன் இழுத்துச்சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். இருப்பினும் வகுப்பறைக்குள் இழுத்துச்சென்று மாணவியை, அந்த மாணவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை 4 கல்லூரி மாணவர்களும் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அவர்களும் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அவர்கள் பிடியில் இருந்து தப்பி வீடு திரும்பினார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோருக்கு தெரிவித்து கதறிஅழுதார். ஆனால் வீடியோ எடுத்த கல்லூரி மாணவர்கள், மாணவியின் வீட்டுக்கே சென்றுள்ளனர். அவர்கள் மாணவியின் பெற்றோரிடம் பேரம் பேசியுள்ளனர். வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடக்கூடாது என்றால் தங்களுக்கு ரூ5 லட்சம் தரவேண்டும் என கேட்டுள்ளனர்.

ஆனால் மாணவியின் பெற்றோர் ரூ2 லட்சம் வரை தர சம்மதித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த கல்லூரி மாணவர்கள் வாட்ஸ் அப்பில் பலாத்கார காட்சிகளை வைரலாக்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பலாத்காரம் செய்த 10ம் வகுப்பு மாணவன் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை நேற்றிரவு கைது செய்தனர். பள்ளி மாணவனை விஜயவாடா சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். கல்லூரி மாணவர்களை கைகளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள சிறையில் அடைத்தனர். வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடக்கூடாது என்றால் ரூ5 லட்சம் தரவேண்டும் என மிரட்டினர். மாணவியின் பெற்றோர் ரூ2 லட்சம் வரை தர சம்மதித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த கல்லூரி மாணவர்கள் வாட்ஸ் அப்பில் பலாத்கார காட்சிகளை வைரலாக்கி உள்ளனர்.

The post பள்ளி வகுப்பறையில் மாணவி பலாத்காரம்: வீடியோ எடுத்து ரூ5 லட்சம் கேட்டு மிரட்டல்: 5 மாணவர்கள் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Ellore ,Andhra Pradesh ,
× RELATED தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய...