×

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பசு வதை தொடர்பாக நடந்த பாஜக பேரணியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடைகளுக்கு அனுப்ப மாட்டிறைச்சி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து பாஜகவினர் அங்கு சென்று தகராறு செய்துள்ளனர். மாட்டிறைச்சி கடைக்காரர்களுக்கும், பாஜகவினருக்கும் ஏற்பட்ட மோதலில் சிலர் காயம் அடைந்தனர். பாஜகவினர் திரண்டு, மற்றொரு சமூகத்தினர் நடத்தி வரும் கடைகள் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவி வருகிறது. இருசமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மேடக் நகரில் பாதுகாப்புக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

The post தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Medak city, Telangana state ,Telangana ,Medak city, Telangana ,
× RELATED பட்டம் பெற்றால் எதுவும் கிடைக்காது...