×

பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை வாதம்

சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஜித் கிருஷ்ணா ஜாமீன் மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த விவகாரத்தில் மருத்துவ ரீதியாக எதையும் நிரூபிக்க முடியாது. கைது செய்யப்பட்டு முப்பது நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவில்லை.

பல மாணவிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த மாணவியை தவிர வேறு ஒருவரும் புகாரளிக்கவில்லை என்று வாதிட்டார். இதனையடுத்து, ஸ்ரீஜித் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த வேண்டுமானால் காவலில் எடுத்து விசாரணை நடத்தலாமே என்று நீதிபதி கேட்டார்.இதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மனு குறித்து விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை நாளைக்கு (இன்று) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை வாதம் appeared first on Dinakaran.

Tags : Kalashetra ,Sreejith Krishna ,Chennai ,Chennai High Court ,Judge ,C. Saravanan ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கி கைதான...