×

பெங்களூருவில் இருந்து சென்னை வந்தார் தனிப்பட்ட பயணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று பகல் 12.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையம் வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘‘சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள எனது குடும்ப உறுப்பினரை பார்த்து, நலம் விசாரிக்க சென்னை வந்திருக்கிறேன்.

எனது சென்னை பயணம், அரசியல் சார்ந்த பயணமோ அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பயணமோ இல்லை. இது முழுக்க முழுக்க தனிப்பட்ட சொந்த பயணம். எனவே இப்போது அரசியல் பேச விரும்பவில்லை’’ என்றார். தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு மல்லிகார்ஜுன கார்கே சென்றார். பின்னர், நேற்று மாலை 4.30 மணிக்கு தனி விமானத்தில் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

The post பெங்களூருவில் இருந்து சென்னை வந்தார் தனிப்பட்ட பயணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bangalore ,Mallikarjuna Kharge ,All India Congress ,president ,Chennai Old Airport ,Bengaluru ,Mallikarjuna Kharke ,
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...