×

மது பாட்டில் கடத்தி வந்த கர்நாடக மாநில வாலிபர் கைது

சூளகிரி, மே 19: பேரிகை காவல்நிலையத்திற்குட்பட்ட மாஸ்த்தி சாலையில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக டூவீலரில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டதில் காநாடகா மாநிலத்திலிருந்து 90 மது பாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், கர்நாடக மாநிலம் மொனஹள்ளி பகுதியைச் சேர்ந்த உதயக்குமார்(22) என்பதும், மதுபான பாரில் வேலை செய்வதும் தெரிய வந்தது. இதயைடுத்து, உதயக்குமாரை கைது செய்த போலீசார், மது பாட்டில்கள் மற்றும் டூவீலரை கைப்பற்றினர்.

The post மது பாட்டில் கடத்தி வந்த கர்நாடக மாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Choolagiri ,Masti Road ,Parikai ,station ,Kannada ,Dinakaran ,
× RELATED பத்திர எழுத்தர் ஆபிசில் புகுந்த பாம்பு