×

பைக் மோதி டெய்லர் பலி

நெய்வேலி, மே 19: நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் என்எல்சி இரண்டாம் நிலக்கரி சுரங்கம் அருகே வசித்து வந்தவர் தட்சிணாமூர்த்தி(65). இவர் மந்தாரகுப்பம் கடை வீதியில் டெய்லர் கடை நடத்தி வந்தார். வழக்கம்போல் கடையில் வேலையை முடித்து வீட்டிற்கு அவரது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த பைக், தட்சிணாமூர்த்தி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில், மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மோதி டெய்லர் பலி appeared first on Dinakaran.

Tags : Taylor ,Neyveli ,Dakshinamurthy ,Mandharakuppam NLC Second Coal Mine ,Mandharakuppam ,Dinakaran ,
× RELATED மகன் தூக்குபோட்டு தற்கொலை