×

தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

 

ஜெயங்கொண்டம், மே18:தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு டெங்கு சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழிகள் எடுத்தல் நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரமேஷ் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் மற்றும் துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் களப்பணி உதவியாளர் விஜயகுமார் சுகாதார ஆய்வாளர்ஜிஜின் கல்லூரி பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இணை பேராசிரியர் ராஜமூர்த்தி உறுதிமொழி வாசிக்க மாணவ மாணவிகள் அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக டெங்கு எவ்வாறு உருவாகின்றது அதனை தடுக்கும் விதம் பற்றி சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் மற்றும் சுகாதார துறையினர் எடுத்துரைத்தனர்.

The post தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : National ,Jeyangondam ,National Dengue Day ,Jayangkondam Government College of Arts and Sciences ,Ramesh ,District ,Supervisor ,Rajkumar ,Dinakaran ,
× RELATED நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து