×

தனியார் ஊழியரிடம் ₹2.52 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, மே 18: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பஸ்தி காந்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்(39). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த 15ம்தேதி ஒரு தகவல் பதிவிடப்பட்டு இருந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதில் கொடுத்திருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு சதீஷ் பேசியுள்ளார். பின்னர், அவர்கள் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, சிறிது சிறிதாக மொத்தம் ₹2 லட்சத்து 52 ஆயிரத்து 488 ஐ அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் கூறியபடி எந்தவித வருமானம் கிடைக்கவில்லை. அந்த நம்பரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சதீஷ், நேற்று முன்தினம், இதுபற்றி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் ஊழியரிடம் ₹2.52 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Satish ,Basti Gandhi Nagar ,Hosur, Krishnagiri District ,Dinakaran ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்