×

3 ஆண்டுக்கு பின் பிளே ஆப் சுற்றில் கால்பதித்து சன்ரைசர்ஸ் சாதனை

ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் 3 ஆண்டுக்கு பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றில் கால் பதித்து சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியில் நேற்று சன்ரைசர்ஸ் – குஜராத் அணிகள் விளையாட இருந்தன. ஆனால் மாலை முதலே ஐதராபாத்தில் கனமழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதற்கு தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் மழை குறைந்த நிலையில், இரவு 8.15 மணிக்கு டாஸ் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்பின் மைதானத்தில் இருந்து தார்பாய்கள் அகற்றப்பட்ட நிலையில், திடீரென மீண்டும் கனமழை பெய்தது. இதன்பின் இரவு 9 மணியளவில் நடுவர்கள் மைதானத்தை பார்வையிட்ட போது, 10.30 மணிக்கு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் மழை குறையாததால்,10.15 மணிக்கு இரு அணிகளின் கேப்டன்களையும் அழைத்த நடுவர்கள், ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலமாக 13 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் அணி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரில் 2020ம் ஆண்டுக்கு பின் சன்ரைசர்ஸ் அணி மீண்டும் பிளே ஆப் சுற்றில் கால் பதித்து சாதனை படைத்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாட உள்ளதால், டாப் 2 இடங்களில் முடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

 

The post 3 ஆண்டுக்கு பின் பிளே ஆப் சுற்றில் கால்பதித்து சன்ரைசர்ஸ் சாதனை appeared first on Dinakaran.

Tags : Sunrisers' ,Hyderabad ,IPL ,Sunrisers Hyderabad ,Sunrisers ,Gujarat ,Dinakaran ,
× RELATED பர்தா அணிந்தபடி நகை கடைக்குள்...