×

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, மே 17: காவேரிப்பட்டணம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து, தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் மற்றும் போலீசார் தென் பெண்ணையாற்று பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர்.

இதில், இருவர் மட்டும் போலீசாரின் பிடியில் சிக்கினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்ததில், காவேரிப்பட்டணம் அடுத்த கோவிந்தசெட்டி பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (24), குண்டலப்பட்டி பூங்காவனம் (49) என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹5,100 மதிப்பிலான 1,100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். தொடர்ந்து தப்பியோடிய கோவிந்தசெட்டி பகுதியை சேர்ந்த தினேஷ்(24), திம்மராயன்(25), விக்னேஷ்(28), மணி பாரதி(24) ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

The post கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Kaveripatnam ,Krishnagiri District ,Inspector ,Balaji Ramanan ,South Pannayatu bridge ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்