×

துவரங்குறிச்சி-மணப்பாறை தேசிய நெடுஞ்சாலை பணிகள் ஆய்வு

துவரங்குறிச்சி, மே 17: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் இருந்து பிள்ளையார் கோவில்பட்டி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. அதனை நேற்று நெடுஞ்சாலைத்துறை திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் மருங்காபுரிபிரிவை சேர்ந்த மணப்பாறை துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022 – 23ம் ஆண்டுக்கான சாலைப் பணி ரூ.50 கோடி அரசு நிதி ஒப்பந்தம் பெறப்பட்டு இருவழி சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தங்களை இரு தனியார் நிறுவனங்கள் எடுத்து வேலை செய்து வருகின்றனர். இதில் 90 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் இப்பணியை நெடுஞ்சாலை துறையில் உள்ள தணிக்கை குழு கண்காணிப்பு பொறியாளர்கள் ரமேஷ், தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை தலைமையில், கண்ணன் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருச்சி, பொறியாளர் சேதுபதி தேசிய நெடுஞ்சாலை திருச்சி, உதவி கோட்டபொறியாளர் மணப்பாறை சுப்பையா, ரவிக்குமார் திருச்சி, உதவி பொறியாளர்கள் பிரவீன் ராஜ், திலகவதி ஆகியோர் துவரங்குறிச்சி-மணப்பாறை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பகுதிகளின் அமைக்கப்பட்டு வரும் தார் சாலைகளை தரம் குறித்து ஆய்வு செய்து உள் தணிக்கை செய்யப்பட்டது. சாலைகளை நான்கு வழி சாலைகளாக மேம்பாடு செய்யப்பட்டதால் அரசுக்கு பொதுமக்கள் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்பணி விரைவில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

The post துவரங்குறிச்சி-மணப்பாறை தேசிய நெடுஞ்சாலை பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Dwarankurichi ,Manaparai National Highway ,Duvarankurichi ,Trichy district ,Pilliyar Kovilpatti ,Trichy Construction and Maintenance Division ,Highway Department ,Marungapuri ,
× RELATED துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்