×
Saravana Stores

வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற மே 31க்குள் விண்ணப்பிக்கலாம்

 

தேனி, மே 17: தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிக்கை: ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் 2024-25ம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

வெளிநாடுகளில் உயர் படிப்பை பயில விரும்பும் ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணவர்கள் https://overseas.tribal.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வருகிற 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை https://overseas.tribal.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.

The post வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற மே 31க்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Theni ,District ,Collector ,Shajiwana ,Union Government's Ministry of Tribal Welfare ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் கண்மாய்கள் நிரம்பின