×
Saravana Stores

தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு விழிப்புணர்வு: ஆணையர் பங்கேற்பு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பொது சுகாதார பிரிவு சார்பில், தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு, ‘சமூகத்துடன் இணைந்து டெங்குவை கட்டுப்படுத்துவோம்,’ என்ற கருப்பொருளுடன் தாம்பரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில், மாநகராட்சி ஆணையர் அழகு மீனா தலைமையில் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு விழிப்புணர்வு குறித்த டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, உறுதிமொழி ஏற்றல் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 9 நகர்ப்புற நலவாழ்வு மையங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, உறுதிமொழி ஏற்றல் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

புழல்: புழல் காந்தி பிரதான சாலையில் மாநகராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுகாதார ஆய்வாளர் ரமேஷ் ராஜா தலைமையில் நடந்தது. இதில், 23வது வார்டு சுகாதாரத்துறை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு விழிப்புணர்வு: ஆணையர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Public Health Division ,National Dengue Day ,Tambaram Municipal Corporation ,Municipal Corporation ,Commissioner ,Agok Meena ,Dengue Prevention and Control ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய...