×

தொழிலாளியிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது

ஓசூர், மே 16: ஓசூர் சாந்தி நகர் பகுதியில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜூகல் மியா (22) என்பவர் ஓட்டலில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி, தனது நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு வாலிபர், கத்தியை காட்டி ஜூகல்மியாவை மிரட்டி, அவரிடம் இருந்து ₹2 ஆயிரம், செல்போனை பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து ஜூகல் மியா ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி, பணத்தை பறித்துச் சென்ற சானமாவு பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (19) என்பவரை கைது செய்தனர்.

The post தொழிலாளியிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Hosur ,Jukal Mia ,Tripura ,Shanti Nagar ,
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்