- கோவா
- கல்வித் துறை மூவர் குழு
- கோவா மாவட்ட கலெக்டர் அலுவலகம்
- கிரந்திகுமார் பாடி
- மாநகர போலீஸ் ஆணையர்
- பாலகிருஷ்ணன்
- எஸ். பி பத்ரி நாராயணன்
- ஆணையாளர்
- தின மலர்
கோவை, மே 15: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்வித்துறை சார்ந்த மூன்றடுக்க குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் எஸ்.பி பத்ரி நாராயணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வதோசுமன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர், சுகாதாரத்துறை அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பிளஸ்2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பள்ளி வராத மற்றும் பொதுத்தரவில் உள்ள 5,662 குழந்தைகளை கிராமம் வாரியாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை நேரடியாக அனைத்து துறை அலுவலர்கள் சந்தித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பிளஸ்-2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு பயிற்சி அளித்து வரும் துணை தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றல் தடுக்க ெதாடர்ந்து கல்வி கற்க தேவையான நடவடிக்கையை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டும். போதை பொருள் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத 5,662 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை appeared first on Dinakaran.