×

குவாரி குட்டையில் மூழ்கி பெண் பலி

கிருஷ்ணகிரி, மே 15: சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ மனைவி கிருஷ்ணம்மா(32). இவர் கடந்த 30ம்தேதி, கோயில் திருவிழாவிற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனபள்ளி அருகே பைரமங்கலத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம், வீட்டில் இருந்த துணிகளை துவைக்க, அருகில் உள்ள பொன்னிக்கல் கல்குவாரி குட்டைக்கு சென்றுள்ளார். அங்கு கிருஷ்ணம்மா துணிகளை துவைத்துக்கொண்டு இருந்தபோது, திடீரென குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். துணி துவைக்க சென்ற மகள் நீண்ட நேரமாக வராததால் சந்தேகமடைந்த அவரது தாயார், உறவினர்களை அழைத்துக்கொண்டு குட்டைக்கு சென்று பார்த்த போது, அங்கு துணிகள் மட்டும் இருந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குட்டையில் இறங்கி தண்ணீரில் தேடி கிருஷ்ணம்மாவை சடலமாக மீட்டனர். இதையடுத்து, போலீசார் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

The post குவாரி குட்டையில் மூழ்கி பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Elango ,Krishnamma ,Thotakadu ,Mettur, Salem district ,Bairamangalam ,Uthanapalli ,Krishnagiri district ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்