- முதல்வர்
- கெஜ்ரிவால்
- ஆம் ஆத்மி
- சுவாதி மாலிவால்
- புது தில்லி
- முதல் அமைச்சர்
- தில்லி
- ராஜ்ய சபா
- ஆம் ஆத்மி கட்சி
புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு இடர்பாடுகளுக்கு பின் தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இந்நிலையில் முதல்வரை சந்திப்பதற்காக ஆம் ஆத்மியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி சுவாதி மலிவால் நேற்று அவரது வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. ஆனால் முதல்வரின் உதவியாளர் அவருக்கு அனுமதி மறுத்துள்ளார். இந்நிலையில் முதல்வரின் வீட்டில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தனது செல்போனில் தொடர்புகொண்ட சுவாதி மலிவால் தான் முதல்வரது உதவியாளரால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் சுவாதி மலிவாலை சந்தித்து காவல்நிலையத்துக்கு அழைத்துள்ளனர் சிவில் லைன் காவல்நிலையத்துக்கு சென்ற எம்பி சுவாதி மலிவால், முதல்வரின் உதவியாளர் தாக்கிவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
விசாரணை குழு: டெல்லியில் மாநிலங்களவை பெண் எம்பி சுவாதி மலிவால் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்கு விசாரணை குழு அனுப்பி வைக்கப்படும் என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் டெல்லி போலீசார் எடுத்த நடவடிக்கை அறிக்கையை 3 நாட்களில் அனுப்பும்படி முறையாக கடிதம் எழுதப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
The post முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்டேன்: ஆம் ஆத்மி பெண் எம்பி சுவாதி மலிவால் புகார் appeared first on Dinakaran.