×

குழந்தை மாதிரி மோடி அழுகிறார்: பிரியங்காகாந்தி சாடல்

நந்தர்பார்: பிரதமர் மோடி தான் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குழந்தை மாதிரி அழுவதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நந்தர்பர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோத் பத்வியை ஆதரித்து பொது செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய பிரியங்கா காந்தி,‘‘மோடி பேசும் அனைத்தும் வெற்று பேச்சுதான். அதற்கு மதிப்பேதும் கிடையாது. பிரதமர் மோடி ஒரு ஆதிவாசி வீட்டிற்காவது சென்று அவர்களது பிரச்னைகளை புரிந்து கொண்டதாக ஏதேனும் ஒரு புகைப்படத்தை உங்களால் காட்ட முடியுமா. உங்கள் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் மதிக்க வேண்டியது அரசியல் தலைவர்களின் கடமை.

ஆதிவாசிகளின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாஜ மதிக்கவில்லை. ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. உண்மையில் மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் பிரதமர் மோடி பின்வாங்குகிறார். தான் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக பிரதமர் மோடி குழந்தை போன்று அழுகிறார். இது பொது வாழ்க்கை. இந்திரா காந்தியிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். பாகிஸ்தானை இரண்டாக உடைத்த துர்காவை போன்ற பெண். அவருடைய தைரியம் மற்றும் உறுதியை கற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

The post குழந்தை மாதிரி மோடி அழுகிறார்: பிரியங்காகாந்தி சாடல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Priyanka Gandhi Satal ,Nandarbar ,Congress ,General Secretary ,Priyanka Gandhi ,Goth Badhvi ,Nandarpur ,Maharashtra.… ,Priyanka Gandhi Sadal ,
× RELATED பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி..!!