- பாரதியார் பல்கலைக்கழகம் எஸ். சி
- கோவா
- கணினி அறிவியல் திணைக்களம்
- கோவா பாரதியார் பல்கலைக்கழகம்
- எஸ்.சி.
- தின மலர்
கோவை, மே 11: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறை 2024-2025 கல்வியாண்டில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) என்ற புதிய பாடத்தை துவங்கியுள்ளது. இந்த எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு 2 ஆண்டு படிப்பு. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் www.b-u.ac.in என்ற இணையதளத்தில் உள்ளது. விண்ணப்ப கட்டணம் இதர பிரிவினருக்கு ரூ.400, எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.200 ஆகும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் ஜூன் 6-ம் தேதிக்குள் தபால், கூரியர் மூலம் HOD, Department of computer science, Bharathiar University, Coimbatore என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பாரதியார் பல்கலையில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு புதிய பாடம் துவக்கம் appeared first on Dinakaran.