கோவை, மே 9: கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 9 குழுக்களாக பிரிக்கப்பட்டது. இந்த குழுவினர் கோவை மாநகரின் பல பகுதிகளில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், ரோஸ்மில்க், பாதாம் கீர் எவ்வித லேபிள் விபரம் இல்லாத குளிர்பானங்கள், தர்பூசணி மற்றும் இதர பழங்கள், பதநீர் மற்றும் கரும்புச்சாறு, பானிபூரி போன்றவைகளை கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின் போது கண்டறிந்த குறைகளை சரிசெய்யும் பொருட்டு நோட்டீஸ் கொடுத்தல் மற்றும் கள ஆய்வு அபராதம், உணவு மாதிரிகள் எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தொடர் களஆய்வில் இதுவரை 378 கடைகளை ஆய்வு செய்ததில், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், ரோஸ்மில்க், பாதாம் கீர், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் கிரீம் போன்றவைகள் 280 லிட்டரும், தர்பூசணி மற்றும் இதர அழுகிய பழ வகைகள் 258 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மிகுந்த கலர் நிறங்களில் சேர்க்கப்பட்ட ரோஸ்மில்க், பாதாம் கீர், லேபிள் விபரங்கள் இல்லாத குளிர்பானங்கள் மற்றும் பதநீர், கரும்புசாறு, அழுகிய பழங்களை விற்பனை செய்த 81 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டும், 24 உணவு மாதிரிகளும், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகித்ததற்காக 9 கடைகளுக்கு அபராதமாக ரூ.14 ஆயிரம் விதிக்கப்பட்டு அரசு கருவூல கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், வாளையார் ரோடு எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் ஒரு கடையில் குளிர்பானங்களை இறக்கி கொண்டிருந்த ஆம்னி வேனை கள ஆய்வு செய்ததில் மிகுந்த கலர் நிறமி சேர்க்கப்பட்ட மற்றும் எவ்வித லேபிள் விபரங்கள் இல்லாத ரோஸ்மில்க் மற்றும் பாதாம்கீர், நன்னாரி சர்பத், லெமன் குளிர்பானங்களை பறிமுதல் செய்யப்பட்டது.
குனியமுத்தூரில் உள்ள ஒரு குளிர்பான தயாரிப்பு இடத்தை கள ஆய்வு செய்ததில் மிகுந்த கலர் நிறமி சேர்க்கப்பட்ட மற்றும் லேபிளில் விபரங்கள் இல்லாத சுமார் 150 லிட்டர் குளிர்பானங்களான ரோஸ்மில்க் 100 பாட்டில்கள், பாதாம்மில்க் 100 பாட்டில்கள் மற்றும் நன்னாரி 300 பாட்டில்கள் வேறு கம்பெனி பெயருடன் கூடிய லெமன் குளிர்பானங்கள் 125 பாட்டில்கள் ஆகிய அனைத்து வகையான குளிர்பானங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் 5 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக உணவுப் பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம். மேலும், பானிபூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பானிபூரி தயாரிக்கப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 6 சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் இரண்டு தயாரிப்பு இடங்களில் அதிக கலர் நிறமி சேர்க்கப்பட்ட 45 லிட்டர் பானிபூரி மசாலா, 46 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு மற்றும் 15 கிலோ உருளைக்கிழங்கு மசாலா பறிமுதல் செய்யப்பட்டு அதில் நான்கு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பரிசோதனைக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உணவு பொருட்கள் தொடர்பாக 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மே 9: கோவை ரயில் நிலையம் லங்கா கார்னர் பாலம் பகுதியில் ஒருவர் மயங்கி கிடப்பதுபோல கிடந்தார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கே சென்று பார்த்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இறந்தவரின் பாக்கெட்டில் ஒரு ஆதார் கார்டு இருந்தது. அதில் இயேசு ராஜா (37) சூலூர் பிடிஓ காலனி என முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் எப்படி இறந்தார்? என தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post அழுகிய பழங்களை விற்ற 81 கடைகளுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.