×

திருச்சி கலையரங்கில் இன்று நடக்கிறது: உயர்கல்வி என்ன படிக்கலாம்; மாணவர்களுக்கு ஆலோசனை

திருச்சி, மே8: 12 வகுப்பு முடித்து கல்லூரி பயில உள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி பயில வழிகாட்டுவதற்காக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரிக் கனவு” என்ற நிகழ்வு திருச்சி மாவட்டத்தில் இன்று (மே8) கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பான கல்லூரிக் கனவு நிகழ்வு திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக நிடைபெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர் கல்வியியல், கலைஅறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர்.

மேலும் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் வீடியோ காட்சிகள், உயர்கல்வியில் சாதித்த மாணவ-மாணவிகளின் அனுபவ பகிர்வு, உயர் கல்விபயில வங்கிக்கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தகவல்கள் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு வகையான உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளில் உள்ளபடிப்புகள் குறித்துகாட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. எனவே, 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, உயர் கல்வி குறித்து தகுந்த வழிகாட்டுதல்களை பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்

The post திருச்சி கலையரங்கில் இன்று நடக்கிறது: உயர்கல்வி என்ன படிக்கலாம்; மாணவர்களுக்கு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Trichy Art Gallery ,Trichy ,College Dream ,Dinakaran ,
× RELATED 14-ம் தேதி முதல் ‘என் கல்லூரி கனவு’ திட்டம்