×

12ம் வகுப்பு பொதுத்தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

திருச்சி, மே 7: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டத்தில் ஆண்கள் 13, 371, பெண்கள் 16.244 என மொத்தம் 29, 615 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் 12,491 பேர் (93.42%), பெண்கள் 15,863 (97.65%) என மொத்தம் 28.354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.74 சதவிகித தேர்ச்சியாகும். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று தேர்வு எழுதிய 4,775 மாணவர்களில் 4253 பேரும், மாணவியர் 5,589 பேரில் 5,329 பேரும் என மொத்தம் 10,364 பேருக்கு 9.582 பேர் (92.45 %) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில அளவில் 13 ஆவது இடம் : திருச்சி மாவட்டம் தமிழக அளவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் 13வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2021 – 22 கல்வியாண்டில் 95. 93% தேர்ச்சி பெற்று 12வது இடத்தையும், 202 -23 கல்வியாண்டில் 96.02 % தேர்ச்சி பெற்று 13வது இடத்தையும் பெற்றிருந்தது. நடப்பாண்டும் 95.74 % தேர்ச்சியை பெற்று அதே 13வது இடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% மாணவ, மாணவிகள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Trichy district ,Trichy ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு