கோவை, மே 7: கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை கணுவாயில் இருந்து சிங்காநல்லூர் வழியாக செல்லும் தனியார் டவுன் பஸ், வேகமாக நுழைந்தது. அப்போது திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. பயணிகள் அலறி அடித்து ஓடினர். ஆனாலும் சில பயணிகள் மீது மோதிய பஸ் முன்னாள் நின்று கொண்டிருந்த கிணத்துக்கடவு செல்லும் அரசு பஸ்ஸின் பின்பகுதியில் லேசாக மோதி நின்றது.
இந்த சம்பவத்தில் பஸ் ஸ்டாண்டில் பொறிக்கடை நடத்தி வந்த வியாபாரி காயம் அடைந்தார். மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கியதும் கண்டக்டர் இறங்கி சென்றுவிட்டார். பஸ் டிரைவரை பயணிகள் மறித்து வாக்குவாதம் செய்தனர். பஸ்சை இப்படியாக ஒட்டுவது, என்ன ஆச்சு, உயிர் போயிருந்தால் என்ன ஆகும்? என பயணிகள் ஆவேசமாக கேட்டனர். டிரைவர், பிரேக் கட்டுப்பாட்டில் இல்லாமல் போய்விட்டது எனக்கூறியதாக தெரிகிறது. காட்டூர் போலீசார் அங்கே சென்று விசாரித்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post பயணிகள் கூட்டத்தில் புகுந்த பேருந்து appeared first on Dinakaran.