ஈரோடு, மே 7: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாளை முன்னிட்டு 30-க்கும் குறைவான மனுக்களே புகார் பெட்டியில் போட்டு செல்லப்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அதனால் வாராந்திர குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை.
இருப்பினும், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க பெட்டி வைத்து அதில் பொதுமக்கள் மனுக்களை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நேற்று வீட்டுமனை பட்டா, டாஸ்மாக் கடையை இடம் மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 30க்கும் குறைவான மக்களே வரப்பெற்றன. அவை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
The post கலெக்டர் அலுவலகத்தில் 30-க்கும் குறைவான மனுக்கள் appeared first on Dinakaran.