×

குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

கோபி, அக்.26: கோபி அருகே உள்ள பெரிய புலியூர் செட்டிகரடு குட்டையில் மூழ்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்தார். கோபி அருகே உள்ள சலங்கபாளையம் கொட்டாபுலிமேட்டை சேர்ந்தவர் கருப்பணன் மகன் சின்னசாமி (49). கட்டிட தொழிலாளி. இவர், நேற்று காலை செட்டிகரடு குட்டையில் குளிப்பதற்காக சென்று உள்ளார்.

25 அடி ஆழமுள்ள குட்டையில் உள்ள தண்ணீரில் குளித்த போது எதிர்பாராதவிதமாக, சின்னசாமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குட்டையில் மூழ்கி உயிரிழந்த சின்னசாமியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Kobe ,Puliur Setigaradu ,Gobi ,Karupanan ,Sinnasamy ,Salangapaliam Kotapulimet ,Setigaradu ,
× RELATED கோபி அருகே நள்ளிரவில் பயங்கரம்...