×

ஐக்கிய நாடுகள் தினத்தையொட்டி கொடியேற்றி கலெக்டர் மரியாதை

ஈரோடு, அக். 25: ஐக்கிய நாடுகள் தினத்தையொட்டி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஐ.நா. கொடி மற்றும் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். உலக அமைதிக்கும், நாடுகளின் ஒற்றுமைக்கும் அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் தினமான நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஐ.நா.சபையின் கொடியையும், தேசிய கொடியையும் ஏற்றி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முகமது குதுரத்துல்லா, பொதுமேலாளர் பாலசுப்ரமணியம், ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஐக்கிய நாடுகள் தினத்தையொட்டி கொடியேற்றி கலெக்டர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : United Nations Day ,Erode ,UN ,Erode Collector ,Office ,United Nations ,
× RELATED அடையாளம் தெரியாத ஆண் சாவு