×
Saravana Stores

360 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது

ஈரோடு, அக். 25: பெருந்துறையில் 360 கிலோ புகையிலை பொருட்களை பைக்கில் கடத்தி சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை பெத்தாம்பாளையம் சாலையில் நேற்று போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் சந்தேகப்படும்படியாக மூட்டையுடன் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பெருந்துறை துடுப்பதி ஓலப்பாளையம் கள்ளக்காடு பகுதியை சேர்ந்த ராகுல் கண்ணன் (24), மற்றொருவர் காஞ்சிக்கோவில் நல்லாம்பட்டி சிங்காநல்லூரை சேர்ந்த கோகுல் (28) என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் பைக்கில் கொண்டு வந்த மூட்டையை சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் பெருந்துறை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.1.44 லட்சம் மதிப்பிலான 360 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post 360 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Perundurai ,Perundurai Pethampalayam road ,Erode district ,Dinakaran ,
× RELATED லாட்டரி சீட்டு விற்றவர் கைது