பொள்ளாச்சி, மே 6: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்னைக்கு அடுத்தப்படியாக, மானாவாரி மற்றும் பல்வேறு காய்கறிகள் சாகுபடி அதிகளவு உள்ளது. இதில் பல கிராமங்களில் விசாயிகள் வாழை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. அதிலும் ஆழியார், கோட்டூர், சமத்தூர், பொன்னாபுரம், ஒடையக்குளம், வடக்கிபாளைம், சூலக்கல், நெகமம், சந்திராபுரம், சேத்துமடை, கோமங்கலம், சரளபதி உள்ளிட்ட பல பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் பருவமழை பெய்யும்போது வாழை நடவு அதிகளவு உள்ளது.
கோடை மழைக்கு முன்னதாக மார்ச் மாதத்திலும், தென்மேற்கு பருவமழையை எதிர்பர்த்து மே மாதம் இறுதியிலும், வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து நவம்பர் மாதமும் வாழை நடவு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் பருவமழைக்கு பிறகு, போதிய மழை இல்லாமல் உள்ளது. நடப்பாண்டில் கோடை மழையும் தற்போது வரை பொய்த்ததால் பெரும்பாலான வாழைகள் போதிய தண்ணீரின்றி வாடிய நிலையில் உள்ளது.
இதனால் பல கிராமங்களில் விவசாயிகள், சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், மழைப்பொழிவு இல்லாததால் பல கிராமங்களில் 2 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட வாழைகள் வாடி வதங்க துவங்கியுள்ளது. அடுத்து மழை பெய்தால் மட்டுமே வாழை உள்ளிட்ட பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
The post கடும் வெயிலால் வாடிய வாழைகள் appeared first on Dinakaran.