×

மின்னணு வாக்கு பதிவு கருவி திருட்டு இயந்திரம்: வாக்காளர்களுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை

ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசும்போது,‘‘மின்னணு வாக்குபதிவு கருவிகள் திருட்டு இயந்திரம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நாளன்று, வாக்கு செலுத்திய பின்னர், இயந்திரத்தில் இருந்து பீப் என்ற ஒலி வரும். அந்த கருவியில் விளக்கு எரியவில்லை எனில் தேர்தல் அதிகாரியிடம் கேட்க வேண்டும். வாக்கு செலுத்திய பின்னர் வாக்களித்த சின்னமும் வாக்காளர் ஒப்புகை சீட்டில் காண்பிக்கும் சின்னமும் ஒன்று தான் என்பதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும் ’’ என்றார்.

The post மின்னணு வாக்கு பதிவு கருவி திருட்டு இயந்திரம்: வாக்காளர்களுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Farooq Abdullah ,Srinagar ,Former ,chief minister ,Kashmir ,Srinagar Lok Sabha ,Dinakaran ,
× RELATED கலைஞரின் 101-வது பிறந்தநாளை ஒட்டி பரூக் அப்துல்லா, டி.ராஜா புகழாரம்..!!