அரியலூர் மே 4:அரியலூர், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுவதால், புறவழிச் சாலையில் பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு அருகில் வண்ணான் குட்டை பகுதியில் வண்டி கடைகளை அமைத்து சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் வண்டி கடைகளில் பெரும்பாலும் அசைவ உணவுகள் விற்கப்பட்டு வருகிறது.
வண்டிகளை சுற்றி சாமினா பந்தல் போட்டுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. நேற்று நகராட்சி ஆணையர் வண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். அப்பொழுது கடைகளில் வைக்கப்பட்டிருந்த கடலை உள்ளிட்ட சில பொருட்கள் தவறி கீழே விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிறு வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் சிறு வியாபாரிகளை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post அரியலூரில் வியாபாரிகள் மறியல் appeared first on Dinakaran.