×

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் டிவிட்டர் கணக்கு முடக்கம்

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தததும் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது போலி வீடியோ என்று பாஜ புகார் செய்தது. இந்த வீடியோவை ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியும் டிவிட்டரில் பகிர்ந்திருந்தது. இது குறித்து ஒன்றிய அரசு அளித்த புகாரின் அடிப்படையில், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கை எக்ஸ் நிறுவனம் நேற்று திடீரென முடக்கியது.

The post ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் டிவிட்டர் கணக்கு முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Jharkhand State Congress ,Twitter ,NEW DELHI ,Union Home Minister ,Amit Shah ,OBC ,SC ,ST ,BJP ,Dinakaran ,
× RELATED இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை