×

2 காங். முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜினாமா


புதுடெல்லி: டெல்லியில் இரண்டு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி நேற்று முன்தினம் கட்சி தலைவர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து டெல்லி காங்கிரஸ் புதிய தலைவராக முன்னாள் எம்எல்ஏவான தேவேந்தர் யாதவை கட்சி தலைமை நியமித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்களான நீரஜ் பாசோயா மற்றும் நசீப் சிங் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளனர். அதில் காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைத்துக்கொண்டதால் தான் தாங்கள் ராஜினாமா செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

The post 2 காங். முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : 2 ,New Delhi ,Congress ,Delhi ,Congress party ,Delhi Congress ,president ,Arvinder Singh Lovely ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு நீதி கோரி நீட்...