×

400 இடங்களுடன் பாஜ 3ம் முறை ஆட்சி அமைக்கும்: யோகி ஆதித்ய நாத் சொல்றாரு

பஹரம்பூர்: மேற்குவங்க மாநிலம்பஹரம்பூர் தொகுதியில் 4ம் கட்டமான மே 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றவரும், மக்களவை தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீண்டும் போட்டியிடுகிறார். மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் நிறுத்தப்பட்டுள்ளார்.

பாஜ வேட்பாளராக நிர்மல் குமார் சாஹா போட்டியிடுகிறார். அங்கு பேசிய உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத், “இதுவரை 2 கட்டமாக 191 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வடமாநிலங்களில் உத்தரபிரதேசத்தின் 80 தொகுதிகளையும் பாஜவுக்கு பரிசாக தருவோம். 400 இடங்களை வென்று மோடி தலைமையில் 3ம் முறையாக பாஜ ஆட்சி அமையும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

The post 400 இடங்களுடன் பாஜ 3ம் முறை ஆட்சி அமைக்கும்: யோகி ஆதித்ய நாத் சொல்றாரு appeared first on Dinakaran.

Tags : BJP ,Yogi Adityanath ,Baharampur ,West Bengal ,Adhir Ranjan Chowdhury ,Congress ,Speaker ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக-வில் பெரும்...