×

தகுதியுடையோர் விண்ணப்பிக்க விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை

பெரம்பலூர்,ஏப்.30: 2024 -2025 ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளை யாட்டு மையம் மற்றும் சிறப்புநிலை விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளதால் தகு தியுடைய மாணவ, மாணவி யர்கள் விண்ணப்பிக்க லாம் என பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடு திகள் செயல்பட்டு வருகின் றன.

2024ஆம் ஆண்டிற் கான பள்ளி மாணவ, மாண வியர்கள் 7, 8, 9, மற்றும்11 ஆம் வகுப்புகளில் சேருவ தற்கான மாவட்ட அளவி லான தேர்வுப் போட்டிகள் வருகிற மேமாதம் 10ஆம் தேதி அன்று மாணவர்க ளுக்கும், 11ஆம்தேதி மாண விகளுக்கும் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் விளை யாட்டு மைதானத்தில் நடத் தப் படவுள்ளது. விளை யாட்டு விடுதியில் மாணவ, மாணவியர் சேருவதற்கு வருகிற மேமாதம் 8ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் www.sdat.tn.gov.in < http://www.sdat.tn.gov.in/ > என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி மாணவர்களுக்கான தேர்வுப்போட்டிகள் தட களம், கூடைப்பந்து, கால் பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபாடி, கையுந்துபந்து, கிரிக்கெட் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுகளுக் கும், பள்ளி மாணவிகளுக் கான தேர்வுப் போட்டிகள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபாடி, மற்றும் கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளுக்கும் நடத்தப்படும், மாவட்ட அளவில் தேர்வு செய்யப் படுபவர்கள் மாநில அளவி லான தேர்வுப்போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக் கப்படுவர்.

சிறப்புநிலை விளையாட்டு விடுதியில் கல்லுாரி மாணவ, மாணவி யர் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுப்போட் டிகள் மே 6ம்தேதி அன்று கீழ்கண்ட விவரப்படி நடை பெறவுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான தடகளம், குத்துச் சண்டை, கபடி மற்றும் பளுதூக்குதல் விளையாட் டுகளுக்கான தேர்வு சென்னையிலுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்திலும், ஹாக்கி விளையாட்டிற்கான தேர்வு சென்னை யில் உள்ள எம்ஆர்கே ஹாக்கி விளையாட்டு மைதானத்திலும் நடைபெறவுள்ளது. மல்யுத்தம் மற்றும் விளை யாட்டுக்கான தேர்வு திருச்சி மாவட்ட விளை யாட்டு மைதானத்திலும் வருகிற 13ஆம்தேதி அன்று காலை 7 மணி முதல் நடை பெறவுள்ளது.

பள்ளி மாணவியர்களுக்கு குத்துச்சண்டை, வாள் விளையாட்டு, ஜீடோ மற் றும் பளுதுாக்குதல் ஆகிய விளையாட்டுக்கள் சென்னையிலுள்ள ஜவ ஹர்லால் நேரு விளை யாட்டு மைதானத்திலும், டேக்வாண்டோ விளையாட்டுக்கான தேர்வு கடலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திலும் வருகிற 14ம்தேதி அன்று 7 மணி முதல் நடைபெறவுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள விளை யாட்டுக்களில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் கள் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான ஆன் லைன் விண்ணப்பப் படிவம் www.sdat.tn.gov.in < http://www.sdat.tn.gov.in/ > மற்றும் tntalent.sdat.in < http://tntalent.sdat.in/ > என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளது.
சிறப்புநிலை விளையாட்டு விடுதிக்கான விண்ணப்பிக்க கடைசி நாள் மேமாதம் 5ம்தேதி மாலை 5 மணி வரையாகும். முதன்மைநிலை விளையாட்டு விடுதிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மேமாதம் 6ம் தேதி மாலை 5 மணி வரையாகும். விளையாட்டு விடுதிக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற மேமாதம் 8ம் தேதி மாலை 5மணி வரைஆகும்.

குறிப் பிட்ட நேரத்திற்கு பிறகு ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்ய இயலாது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மற்ற விண்ணப்பங்கள் அனைத் தும் நிராகரிக்கப்படும். மேலும் தகவல் பெற ஆடு கள தகவல் தொடர்பு மைய அலைபேசி 95140 00777 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். தேர் வுப்போட்டியில் கலந்து கொள்ள வருகின்றவர்களு க்கு பயணப்படியோ, தின ப்படியோ வழங்கப்ப டமாட்டாது. எனவே, 2024-2025 ஆம் ஆண்டிற்கு விளையாட்டு விடுதிகள் முதன்மைநிலை விளை யாட்டு மையம் மற்றும் சிறப்புநிலை விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ,மாணவியர் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமென மாவட்டக் கலெக்டர் கற்பகம் விடுத் துள்ள அறிவிப்பில் தெரி வித்துள்ளார்.

The post தகுதியுடையோர் விண்ணப்பிக்க விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur District Collector ,Primary Level Sports Center ,Special Sports Clubs ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில்...