- எடப்பாடி
- சனி
- சந்தை
- Konganapuram
- சேலம்
- நாமக்கல்
- ஈரோடு
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- பெங்களூரு
- கர்நாடக
- ஆந்திரப் பிரதேசம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
இடைப்பாடி, ஏப்.28: இடைப்பாடி அருகேயுள்ள கொங்கணாபுரத்தில் சனி சந்தை நேற்று கூடியது. இங்கு சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பெங்களூரு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்தனர். சந்தையில் 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ₹5,500 முதல் ₹8,000 வரையும், 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ₹11,000 முதல் ₹16,000 வரையும், 30 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ₹16,500 முதல் ₹24,000 வரையும் விலை போனது. மேலும் வளர்ப்பு குட்டி ஆடு ₹2,700 முதல் ₹3,000 வரை விலை போனது. நேற்று கூடிய சந்தையில் 10,200 ஆடுகள் ₹6 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர்.
The post ₹6 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.