×

மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

மல்லசமுத்திரம், ஏப்.27: மல்லசமுத்திரம் அடுத்த பாலமேடு கிராமம், ஆத்துமேட்டில் கண்ணனூர் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா, கடந்த 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு அக்னி கரகம் எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள், கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலையில், சிறுவர் சிறுமிக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் தர்மகர்த்தா துரைசாமி மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Mariamman Temple Painting Festival ,Mallasamudram ,Kannanur Mariamman Temple painting festival ,Palamedu ,Athumed ,Amman… ,Mariyamman Temple Chitrai Festival ,
× RELATED சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு திறப்பு