அன்னூர்,ஏப்.25: கோவையில் வெயில் கொளுத்தி வருவதால் ஆறு, குளம், கிணறு, போர்வெல், குட்டைகளில் நீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது.நிலத்தடி நீர்மட்டம் கிடு,கிடுவென குறைந்து வருவதால் மரம்,செடி,கொடிகள் காய்ந்து காட்சி அளிக்கின்றன. குளங்களில் தண்ணீர் வற்றத் துவங்கியதால் குளத்தில் வசித்து வந்த மீன்கள்,ஆமை,நண்டு உள்ளிட்ட சிறு உயிரினங்கள் சேற்றிலும்,சகதியிலும் சிக்கி உயிரிழந்து வருகின்றன. ஆழ்குழாய் கிணறுகளிலும் போதிய நீர் இன்மையால் பொதுமக்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.
கோவை மாவட்டம் அன்னூர் சுற்று வட்டாரத்தில் நான்கு மாதங்களுக்கு முன் மழை பெய்தது. அன்னூர் கஞ்சப்பள்ளி, பூலுவபாளையம்,குமாரபாளையம்,கெம்பநாயக்கன்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள குளம்,குட்டைகள் மழை நீரால் நிரம்பியது. இதையடுத்து சமூக ஆர்வலர்களும்,ஊராட்சி நிர்வாகமும் மீன் குஞ்சுகளை குளம்,குட்டைகளில ஆயிரக்கணக்கில் விட்டனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை.வெயிலின் தாக்கம் அதிகமாகி அனல் அடிக்கும் வெயிலாக மாறியது.நிலத்தடி நீர் மட்டமும் சரசரவென குறைந்து வருகிறது.
குளம், குட்டைகளில் தண்ணீரும் குறைந்து வருகிறது. இதனால் குமாரபாளையம்w ,ஆலம்பாளையம் பகுதிகளில் உள்ள குளம்,குட்டைகளில போதிய நீர் இல்லாமல் வெயிலால் வறண்டு வருகிறது. இதனால் மீன்கள் வாழ முடியாத நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் இறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால்,தண்ணீர் வசதி அதிகம் உள்ள குளங்களுக்கு மீன்களை இடமாற்றம் செய்ய வேண்டும் அல்லது தற்போதுள்ள குளங்களில் மீன்கள் இறக்காமல் இருக்க அருகில் உள்ள போர் வெல்களில் இருந்து நீர் வினியோகம் செய்ய வேண்டும்.
குளங்களில் மீன்கள் இறக்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பவானி ஆற்றில் குடிநீர் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் வீடுகளுக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது 13 நாட்களுக்கு ஒரு முறை தான் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் போதிய குடிநீரின்றி தவிக்கின்றனர்.
The post வறட்சியின் பிடியில் நீர் நிலைகள் குளத்தில் நீர் வற்றியதால் மீன்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.