- ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம்
- பிறகு நான்
- தேனி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கம்
- தனுஷ்கோடி
- கோவிந்தராஜ்
- ரத்தினசபாபதி
தேனி, ஏப்.2: தேனியில் ஓய்வு பெற்ற காவலர் சங்கத்தினருக்கு சங்க அலுவலகம் கட்ட நிலம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தேனி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் தனுஷ்கோடி, கோவிந்தராஜ், ரத்தினசபாபதி உள்ளிட்டோர் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், தேனி மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கம் 350 உறுப்பினர்களுடன் பதிவு பெற்று செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் மூலம் ஓய்வு பெற்ற காவலர்களின் குடும்ப நலன், வளர்ச்சிக்கான நலம் குறித்து சேவையாற்றி வருகிறது.
சங்கத்திற்கான கட்டிடம் தற்போது வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எங்களது ஓய்வு பெற்றோர் காவலர் சங்கத்திற்கு தேனி நகர் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை அரசு நிர்ணயத்த தொகையை செலுத்த தயாராக உள்ளோம். எனவே, எங்கள் சங்கத்திற்கு நிலம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
The post ஓய்வு பெற்ற போலீசார் சங்கத்திற்கு நிலம் கேட்டு கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.