×

என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு: தன்னை வீழ்த்துவதற்காக இந்தியா மற்றும் வெளிநாட்டு சக்திகள் கைகோர்த்திருப்பதாக பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபுராவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த நபர்கள் என்னை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்திருக்கின்றனர். ஆனால் பெண் சக்தி தான் எனது கவசம். பெண் சக்தி மூலம் தான் இந்த சவால்களை எல்லாம் எதிர்த்து என்னால் சண்டையிட முடிகிறது. என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். ஆனால் என் கவனம் முழுவதும், நாட்டின் வளர்ச்சியிலேயே உள்ளது. 21ம் நூற்றாண்டில் நாட்டை வளர்ச்சியடைய செய்வதே என் இலக்கு. கர்நாடக மாநிலத்தின் மீதான தேவகவுடாவின் அர்ப்பணிப்பும், இன்றைய கர்நாடகாவின் அவல நிலை குறித்து அவரது மனதில் இருக்கும் வலியும், அவர் எழுப்பும் குரலுமே, கர்நாடக மாநிலத்தின் பிரகாசமான வளர்ச்சிக்கான சான்று என்று பிரதமர் மோடி பேசினார்.

* சோனியா மீது தாக்கு
ராஜஸ்தானில் உள்ள ஜலோரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை தாக்கி பேசினார். மக்களவை தேர்தலில் போட்டியிட்டதால் தோற்றுவிடுவோம் என்று அஞ்சி ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டார் என்று சோனியாவை மோடி விமர்சித்தார்.

The post என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Bengaluru ,India ,Chikkaballapura, Karnataka ,
× RELATED பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்:...