×

கர்நாடகா கோயிலில் தீப்பந்தங்களை வீசி நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்

மங்களூரு: கர்நாடகாவில கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோயிலில் நேற்று ஒருவருக்கொருவர் தீபந்தங்களை வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள கட்டீல் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயிலில் வருடாந்திர திருவிழா நடந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை அட்டூர் மற்றும் கொடத்தூர் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டு நேர்த்திகடன் செலுத்தினர்.
பக்தி பரவசத்தில் பக்தர்கள் வீசிக் கொள்ளும் தீ பந்தம் மிகப்பெரிய போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இதில் யார் பின்வாங்குகிறார்களோ அவர்கள் தோற்றதாக கருதிக் கொள்ளப்படுகிறது. பின்னர் அனைவரும் நந்தினி ஆற்றில் குளித்துவிட்டு துர்கா பரமேஸ்வரியை வணங்கி பின் தங்களது விரதங்களை முடித்துக் கொள்வது காலங்காலமாக நடந்து வருகிறது. நேற்று முன் தினம் நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இந்த தீப்பந்த நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். அரக்கன் ஒருவனுடன் துர்கா போர் புரிந்த போது அவனது ரத்தம் சொட்டும் இடமெல்லாம் புதிய அரக்கன் உருவாகி போர் தொடங்கியது. எனவே ஒரு துளி ரத்தம் கீழே சொட்டவிடாமல் அந்த அரக்கனை துர்கா பரமேஸ்வரி அழித்த நாளையே இப்படி பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.

The post கர்நாடகா கோயிலில் தீப்பந்தங்களை வீசி நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Karnataka temple ,Mangaluru ,Katil Durga Parameshwari temple ,Karnataka ,Kattil ,Sri ,Durga Parameshwari Temple ,Mangalore, Karnataka ,
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்