ஜகர்தா: இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் உள்ள எரிமலையானது நேற்று முன்தினம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் எரிமலையில் இருந்து நெருப்புபிழம்புகள் வெளியேறி வருகின்றது. நேற்று முன்தினம் சுமார் 800 பேர் வெளியேறினார்கள். இதனை தொடர்ந்து நேற்றும் ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மொத்தம் 11000 பேர் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எரிமலையில் இருந்து சுமார் 6கி.மீ. தூரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறல்: 11 ஆயிரம் பேர் வெளியேற்றம் appeared first on Dinakaran.