×

ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு இன்றி நியாயமாக தேர்தல் நடந்தால் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வராது: மாயாவதி அதிரடி

முசாபர்நகர்: உபியின் முசாபர்நகர் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி தலைவர் மாயாவதி நேற்று பேசியதாவது:
மேற்கு உத்தரப்பிரதேசம் தனி மாநிலமாக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இதற்காக, ஒன்றியத்தில் எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தால் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுதந்திரமாக, நியாயமாக தேர்தல் நடத்தப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யாவிட்டால், இந்த முறை பாஜ மீண்டும் ஆட்சிக்கு வராது.

பாஜவின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின் பெரும்பாலான நேரம், தொழிலதிபர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குவதற்கும், அவர்களை பாதுகாப்பதற்கும் செலவழிக்கப்பட்டது. பாஜவும், அதன் கூட்டணி கட்சிகளும் தொழிலதிபர்களின் ஆதரவில் செயல்படுகின்றன, தேர்தலில் போட்டியிடுகின்றன. இது தேர்தல் பத்திரம் மூலம் தெரியவந்துள்ளது. மதத்தின் பெயரால் வன்முறை அதிகரித்துள்ளது என்றார்.

The post ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு இன்றி நியாயமாக தேர்தல் நடந்தால் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வராது: மாயாவதி அதிரடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Mayawati ,Muzaffarnagar ,Bahujan Samaj ,UP ,West Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல...