×

நெல்லையப்பர் கோயிலில் தங்கத்தேரில் காந்திமதி அம்பாள் பவனி

நெல்லை:  நெல்லை டவுனில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயில் தங்கத்தேர் 13ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நேற்று இரவு கோயில் உள்பிரகாரத்தில் காந்திமதி அம்பாள் தங்கத்தேரில் பவனி வரும்  வைபவம்  நடந்தது. தலைமை வகித்த மாநகர ேபாலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) சுரேஷ்குமார், தங்கத்தேரோட்ட வைபவத்தை துவக்கிவைத்தார். இதில் சொனா வெங்கடாசலம், நெல்லை மதிதா இந்துக்கல்லூரி கல்விசங்கச் செயலாளர் ஆன்ட்ரூஸ் செல்லையா, காசிவிஸ்வநாதன், வெங்கட்ராமன், சீனிவாசன், குணசேகரன், நுகர்வோர் செயலாளர் கணேசன், முன்னாள் கவுன்சிலர் நமசிவாயம் (எ) கோபி மற்றும் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதையொட்டி சிறப்பு நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நெல்லை காந்திமதி சமேத நெல்லையப்பர் உபயத் திருப்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்….

The post நெல்லையப்பர் கோயிலில் தங்கத்தேரில் காந்திமதி அம்பாள் பவனி appeared first on Dinakaran.

Tags : Gandhimati ,Ambal Bhavani ,Thangather ,Nellayapar Temple ,Nellai ,Nellaiappar ,Nellai Town ,Gandhimati Ambal Temple ,Nellaiappar Temple ,
× RELATED உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயிலில் 21ம் தேதி வைகாசி விசாக தேரோட்டம்