×

இரட்டை இலைக்கு போட்டு வாக்குகளை வீணாக்காதீங்க; அதிமுகவினருக்கு அன்புமணி வேண்டுகோள்

சேலம்: சேலம் தொகுதி பாமக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து சேலத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: இது எடப்பாடி பழனிசாமியின் மாவட்டம். அவர் முதல்வராக இருந்த நேரத்தில் இந்த மாவட்டம் வளர்ச்சி பெற எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் 2 மேம்பாலங்களை மட்டும் கட்டினார். அதிமுக நண்பர்களுக்கு பணிவான வேண்டுகோள். உங்களது வாக்குகளை வீணாக்காதீர்கள். அதிமுக தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இல்லை. இந்தியாவை ஆளும் கட்சியும் இல்லை.

தேசிய கூட்டணியிலும் இல்லை. உங்களுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக முடியாது. எனவே வாக்குகளை வீணாக்காதீர்கள். 2 வாரத்திற்கு முன்பு பிரதமர் மோடி சேலம் வந்தார். அப்போது நேரடியாக அய்யாவின் கையை பிடித்தார். இது மேடைநாடகம் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மிக மூத்த அ்ரசியல் தலைவர் என்று அய்யாவை மோடி சொன்னார். அவரது அனுபவம் தமிழ்நாடு, இந்தியாவுக்கு தேவை என்றார். இவ்வாறு அவர் பேசினார்.

The post இரட்டை இலைக்கு போட்டு வாக்குகளை வீணாக்காதீங்க; அதிமுகவினருக்கு அன்புமணி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,AIADMK ,Salem ,Salem Constituency ,BMC ,Annadurai ,Anbumani Ramadoss ,Edappadi Palaniswami ,Chief Minister ,
× RELATED கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு – அன்புமணி